Friday 13 August 2021

குடும்பத் தலைவர் பெயரை மாற்றம் செய்ய வேண்டாம் - பழனிவேல் தியாகராஜன்

 


இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்காக, குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் செய்யத் தேவையில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.


கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2012-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதில் அவர் அறிவித்திருப்பதாவது,

தமிழக நிதிநிலை அறிக்கையை பேரவைக் கூட்டத் தொடரில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வரும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கத்தில்,


குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால் தான் உரிமைத் தொகை உதவி கிடைக்கும் என்று தவறாக புரிந்து கொல்லப்பட்டுள்ளது.  இதனால் பல குடும்ப அட்டைகளில், பெண் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குடும்பத்ட் தலைவராக பெயர் மாற்றப்பட்டு வருகிறது.

 இந்த உரிமைத் தொகை நிதியுதவியை இல்லத்தில் பணி செய்யும் இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் வழங்கப்பட உள்ளது.  எனவே, குடும்பத் தலைவியாக இருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் என்று பரவிய தகவல் தவறானது.  எனவே, உரிமைத் தொகை பெற பெண்கள் தான் குடும்பத் தலைவியாக இருக்கவேண்டும் என்று தவறாக நினைத்து குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவர்களின் பெயர்களை மாற்ற வேண்டியது அவசியம் இல்லை.

தகுதிவாய்ந்த குடும்பங்களை கண்டறிய வரைமுறைகள் ஊருகாக்கப்படும்.  இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பிறகே அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.


No comments:

Post a Comment